உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு

காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு

காங்கேயம்: ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில், பரம்பிக்குளம் ஆழியாரிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொங்கு மண்டலத்தில் பிரதான பாசனமாக விளங்கி வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து, 4 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. பரம்பிக்குளம் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், சர்க்கார்பதியை அடைந்து, மின் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து, 50 கி.மீ., நீள சம மட்ட கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு செய்யாமல் சேதமடைந்த கால்வாயை, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 2010ல், 184 கோடி ரூபாய் மதிப்பில், சேதமுற்ற காண்டூர் கால்வாய் பகுதிகளில், சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக சர்க்கார் பதியிலிருந்து, 1,200 கன அடி நீர் சமமட்ட கால்வாயில் திறந்துவிடும் போது, திருமூர்த்தி அணைக்கு, 600 கன அடி மட்டுமே வந்தது. கால்வாய் சீரமைப்பால், 1,000 கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.கடந்த அ.தி.மு.க.,வின், 10 ஆண்டுகால ஆட்சியில் கால்வாய் தொடர் பராமரிப்பு பணி நடக்காமல், இயற்கை சீற்றங்களால் சேதமுற்ற கால்வாய் பகுதிகளை சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பகுதிகளை சீரமைக்க முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கி தந்தார். கடந்த மே மாதம் வரை கால்வாயில் தண்ணீர் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், பராமரிப்பு பணிகள் அதன் பிறகே ஆரம்பிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. பாசனத்துக்கு அவசர நிலை கருதி இந்த மாத முதல் வாரத்தில் பரம்பிக்குளம் ஆழியாரிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை