உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

அந்தியூர்:கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் அருகே பொன்னாசி பகுதியை சேர்ந்தவர் புட்டிப்பா, 51. இவர் கடந்த ஒரு மாதமாக, அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி பெஜிலிட்டி தனியார் கல் குவாரியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலையை முடித்து விட்டு, கல் குவாரியில் உள்ள சிறிய குளத்தில் குளிக்க சென்றவர், நீச்சல் தெரியாமல் ஆழத்தில் மூழ்கி இறந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த புகார்படி, பர்கூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை