உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த கண்ணமுத்தம்பட்டியை சேர்ந்தவர் தெய்-வானை, 31. அதே ஊரை சேர்ந்த கருணாகரன், 37. கார்பென்டர் தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி, 10 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். கருணாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், சில நேரங்களில் அவராகவே தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பார்.இந்நிலையில் கடந்த, 12ம் தேதி காலை 10:00 மணியளவில் தெய்வானை தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த கரு-ணாகரனை காணவில்லை. பல இடங்களை தேடியும், விசா-ரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதுகுறித்து தெய்வானை கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை