உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் மாயனுாருக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் மாயனுாருக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கரூர் : கரூர் மாவட்டத்தில், மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக, மாலை முதல் அதிகாலை வரை மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை முடிவடைந்த, 24 மணி நேரத்தில், கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) கரூர், 42, அரவக்குறிச்சி, 16.4, அணைப்பாளையம், 34.4, க.பரமத்தி, 24.6, குளித்தலை, 17, தோகைமலை, 15.4, கிருஷ்ணராயபுரம், 9, மாயனுார், 12, பஞ்சப்பட்டி, 4.2, கடவூர், 20, பாலவிடுதி, 31, மயிலம்பட்டி, 5. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 19.25 மி.மீ., மழை பதிவானது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 1,902 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 2,966 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, நான்கு பாசன கிளை வாய்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை