உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் கோரி போராட்டம்

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் கோரி போராட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., மத்திய அமைப்பு திட்டத்தலைவர் துரை தலைமை வகித்தார். இதில், பிரிவுக்கு, 2 பேரை ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து, நேரடி தினக்கூலி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக சம்பளம் இன்றி பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினக்கூலியாக, 380 ரூபாய் வாரியமே நேரடியாக வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை