உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

கரூர், கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில், தமிழ் கனவு கண்காட்சி நிகழ்ச்சி நடந்தது.இதில், காலத்தை வென்ற கவிஞர்கள் என்ற தலைப்பில், கவிஞர் நெல்லை ஜெயந்தா பேசினார். தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு உணர்த்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் கண்காட்சியில், புத்தகங்கள், நான் முதல்வன் திட்டம் சார்ந்த கையேடுகள், வேலை வாய்ப்பு அலுவலக வழி காட்டல், உயர்கல்வி வழிகாட்டுதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், மாவட்ட தொழில் மைய வழிகாட்டல், மகளிர் சுய உதவிக்குழு அரங்குகள் போன்ற பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. கரூர் டி.ஆர்.ஓ., விமல்ராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை