மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் ஆசிரியருக்கு சிறை
1 hour(s) ago
மதுரை- சினிமா- 29.10
1 hour(s) ago
நீட் போலி சான்று ஜாமின் அனுமதி
1 hour(s) ago
ஒத்தக்கடை: மதுரை திருவாதவூர் ரோட்டில் தெற்காமூர் பஸ் ஸ்டாப் அருகே கழிவுநீர் வாய்க்கால் அருகே பாண்டியர் கால கல்வெட்டை இளைஞர்கள் மீட்டு பாதுகாக்கின்றனர்.சிற்பத்துறை ஆய்வாளர் பேராசிரியை தேவி கூறியதாவது: தெற்காமூர், இடையபட்டி, சொருகுளிப்பட்டி ஊர் இளைஞர்கள் இங்கு பஸ் ஸ்டாப் அருகே கழிவுநீர் வாய்க்கால் அருகில் கிடந்த பாண்டியர் கால கல்வெட்டை மீட்டு வெள்ளி மலையாண்டி முருகன் கோயில் வளாகத்தில் வைத்துள்ளனர். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் வாசித்ததில் மதுரையில் மாலிக்காபூர் படையெடுப்பு நிகழ்ந்த காலமாக கருதப்படும் கி.பி. 13ம் நுாற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 43 வது ஆட்சி ஆண்டு என குறிப்பிட்டிருந்தது தெரிந்தது. மேலும் ஐந்து வரிகள் கொண்ட கல்வெட்டில் வீராசிங்க பேரையன் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்புடைய கல்வெட்டுகள் இல்லாததால் பிற விபரங்கள் தெரியவில்லை. அதன் முக்கியத்துவம் அறியாமல் அப்பகுதி மக்கள் கல்வெட்டுகளை கட்டுமான பணிக்கு பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது என்றார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago