உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விசைத்தறி தொழிலாளி கிணற்றில் விழுந்து பலி

விசைத்தறி தொழிலாளி கிணற்றில் விழுந்து பலி

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, காசிக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்-தில்குமார், 38; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று மாலை, 5:30 மணிக்கு, மேல்முகம் கிராமம், பள்ளிப்பட்டியில் கிணற்றின் ஓரத்தில் நின்றுகொண்டு, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், செந்தில் குமாரை உடலை தேடி வருகின்-றனர். ஆழமான பகுதியில் உடல் சிக்கியிருப்பதால், உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். செந்தில்குமாருக்கு, காயத்திரி, 30, என்ற மனைவியும், 17 வயதில் மகள், 15 வயதில் மகன் உள்ளனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை