உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் கோழி நோய் ஆய்வகத்தை தரம் உயர்த்த எம்.பி., வேண்டுகோள்

நாமக்கல் கோழி நோய் ஆய்வகத்தை தரம் உயர்த்த எம்.பி., வேண்டுகோள்

நாமக்கல்: டில்லியில் நடந்து வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின் போது, தி.மு.க., - எம்.பி., நாமக்கல் ராஜேஸ்குமார் பேசியதாவது:அகில இந்திய அளவில் கோழி வளர்ப்பில், நாமக்கல் மண்டலம் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரியில், கோழி நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம் உள்ளது. நோய் கண்டறிதல், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஏற்றுமதி சான்றிதழை வழங்குவதன் மூலம், கோழிகளுக்கான நோய் சவால்களை எதிர்கொள்வதில், இந்த ஆய்வு மையம் முக்கிய பங்கு வகிக்கிறது.இருப்பினும், சர்வதேச அளவில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களால், நாமக்கல் மண்டலத்தில் அவ்வப்போது, கணிசமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உருவாகி உள்ளது. அதனால், மேம்பட்ட உபகரணங்களுடன், சர்வதேச அளவில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கோழி இன நோய் ஆய்வகமாக, இந்த ஆய்வகத்தை மேம்படுத்த, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ