உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோட்ட ஹால் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு

கோட்ட ஹால் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு

கோத்தகிரி;கோத்தகிரி கோட்ட ஹால் பகுதியில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, ஈளாடா தடுப்பணையில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு, கடுமையான வெயில் காரணமாக, நகரப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.குறிப்பாக, 150க்கும் மேற்பட்ட கோட்ட ஹால் பகுதி மக்களுக்கு, கடந்த, 15 நாட்களாக, சீரான தண்ணீர் கிடைக்காமல் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, இப்பகுதி மக்கள் குறிப்பாக, பெண்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் வெயிலின் தாக்கம், அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே, 'மக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம், சீரான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை