உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவை தொகுதியில் காங்., போட்டி; கூட்டத்தில் தீர்மானம்

கோவை தொகுதியில் காங்., போட்டி; கூட்டத்தில் தீர்மானம்

பெ.நா.பாளையம்;கோவை லோக்சபா தொகுதியில் காங்., போட்டியிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கோவை மாநகர் மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி காங்., கட்சி பூத் ஆய்வுக் கூட்டம் துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவில் நடந்தது. மாநகர் மாவட்ட காங்., தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில், தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்வ பெருந்தகைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கோவை லோக்சபா தொகுதியில் காங்., போட்டியிட வேண்டுமெனவும், தி.மு.க., கூட்டணி சார்பில், எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும், அவரை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்வது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், மாநில பொது குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட முன்னாள் தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை