மேலும் செய்திகள்
கண்ணபுரத்தில் மகாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா
02-Nov-2025
திருப்புல்லாணியில் உழவாரப்பணி
02-Nov-2025
ஒடிசா ரயிலில் புகையிலை பறிமுதல்
02-Nov-2025
கடலாடி : கடலாடி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது.கடலாடி யூனியன் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.கடுகுச்சந்தை கிராமத்தில் வேளாண் துறையின் மூலம் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயனாளியின் தோட்டத்தில் இயற்கை இடுபொருள் உற்பத்தியாளர் குழுவின் மூலம் இயற்கை உயிர் உரம் தயாரிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.சிக்கல் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியை பார்வையிட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் வசதிகள் பற்றி தொடர்புடைய அலுவலரிடம் விசாரித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி கலெக்டர் (பயிற்சி) மொகத் இர்பான், துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
02-Nov-2025
02-Nov-2025
02-Nov-2025