உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொடி நாள் நிதி ரூ.2.42 கோடி இலக்கை அடைய அறிவுரை

கொடி நாள் நிதி ரூ.2.42 கோடி இலக்கை அடைய அறிவுரை

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்-துறை சார்பில் கொடி நாள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது: சேலம் மாவட்டத்துக்கு, 2024ம் ஆண்டு கொடி நாள் வசூல், 2.30 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாவட்டம் முழுதும் அனைத்து துறை அலுவலர்களின் கூட்டு முயற்சியால், கடந்த, 4 ஆண்டுகளில் இல்லாதபடி, 2.63 கோடி ரூபாய் வசூலித்து, இலக்கை விட, 14.19 சதவிதம் கூடுதலாக நிதி பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநகராட்சி இலக்கு, 18.40 லட்சம் ரூபாய்க்கு, 20.30 லட்சம் ரூபாயாக வசூலிக்கப்பட்டுள்-ளது. 2025ம் ஆண்டு கொடி நாள் நிதி வசூல் இலக்கு, 2.42 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையும் அலுவ-லர்கள் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 17 முன்னாள் படை வீரர்களுக்கு, 4.17 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் லெப்.கமாண்டர் சங்கீதா உள்ளிட்ட அலுவலர்கள், முன்னாள் படை வீரர்களின் குடும்பத்-தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை