உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உதவி செயற்பொறியாளர் வீட்டில் பணம், நகை திருட்டு

உதவி செயற்பொறியாளர் வீட்டில் பணம், நகை திருட்டு

சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, புது ஏரி ரோடு, தாமரை நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 56. தஞ்சாவூரில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிகிறார்.இவரது மனைவி, கடந்தாண்டு ஜூலை இறந்ததால், அவரது இரு மகள்களும், சேலம் வின்சென்ட்டில் உறவினர் வீட்டில் வசிக்கின்றனர். இருவரும் நேற்று காலை, 11:30 மணிக்கு தாமரை நகரில் பூட்டியிருக்கும் வீட்டுக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 40,000 ரூபாய், 50 கிராம் வெள்ளி பொருட்கள், 2 கிராம் தங்க மூக்குத்தி திருடுபோனது தெரிந்தது.கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை