உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்தியவர் கைது

கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்தியவர் கைது

சேலம்: சேலம், பெரமனுார், கோவிந்த கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 35. கூலித்தொழிலாளி. ஸ்வர்ணபுரியை சேர்ந்தவர் முகமது உசேன், 34. இவருக்கு சதீஷ்குமார் கடன் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு சதீஷ்குமார், மெய்யனுாரில் இருந்த முகமது உசேனிடம், கொடுத்த கடன், 1,000 ரூபாயை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகமது உசேன், சதீஷ்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார், முகமது உசேனை நேற்று கைது செய்தனர். அவர் மீது அன்னதானப்பட்டி உள்பட, சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் அடிதடி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை