உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை-ஆர்.எஸ்.,மங்கலம், சூராணம்அரசு பஸ்கள் நிறுத்தம்: கிராம மக்கள் அவதி 

சிவகங்கை-ஆர்.எஸ்.,மங்கலம், சூராணம்அரசு பஸ்கள் நிறுத்தம்: கிராம மக்கள் அவதி 

சிவகங்கை : காளையார்கோவில் பகுதியில் உள்ள 25 கிராம மக்களை பரிதவிக்க செய்யும் விதமாக, அரசு பஸ்களை இயக்குவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் இலந்தக்கரை, மாரந்தை ஊராட்சிகளில் 25 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்களின் தேவைக்காக சிவகங்கையில் காலை 5:10 மணிக்கு புறப்படும் அரசு பஸ் காளையார்கோவில், வேளாரேந்தல், இலந்தக்கரை, கோடிக்கரை, சூராணம் வழியாக ஆர்.எஸ்., மங்கலம் வரை ஒரு வழித்தடமாகவும், சிவகங்கையில் மாலை 4:10 மணிக்கு புறப்படும் அரசு பஸ் சாத்தரசன்கோட்டை, அதப்படக்கி, மறவமங்கலம், வேளாரேந்தல், சூராணம் வழியாக ஆர்.எஸ்., மங்கலம் வரை மற்றொரு வழித்தடத்தில் இயக்கப்பட்டன.அதே போன்று மதுரையில் இருந்து தினமும் மாலை 6:45 மணிக்கு புறப்படும் அரசு பஸ் சிவகங்கை, காளையார்கோவில், வேளாரேந்தல், இலந்தக்கரை, கோடிக்கரை வழியாக சூராணம் சென்று, அங்கு தங்கிவிடும். மறுநாள் அந்த பஸ் புறப்பட்டு சிவகங்கை வழியாக மதுரை செல்லும்.இந்த பஸ்கள் மூலம் விவசாய பொருட்களை எடுத்து செல்லவும், பள்ளி, கல்லுாரிக்கும், வங்கிகளுக்கு செல்லும் மக்கள் பயன் அடைந்து வந்தனர். பகல் நேரங்களில் இப்பகுதி மக்களுக்கு அரசு டவுன் பஸ் வசதி இல்லை. அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், இந்த பஸ்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டதால் இலந்தக்கரை, மாரந்தை ஊராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி சூராணம், வேளாரேந்தல், சேத்துார், காளையார்கோவில் வரை சென்று தான் பிற முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், தடையின்றி இப்பகுதி மக்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை