உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சை பெண் மூணாறில் பலி

தஞ்சை பெண் மூணாறில் பலி

மூணாறு:தஞ்சாவூர் அய்யம்பேட்டையில் இருந்து உறவினர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்த பெண் இறந்தார்.தஞ்சாவூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த முகம்மதுஅலி வெளிநாட்டில் உள்ளார். அவரது மனைவி ஆயிஷா பானு 48, உறவினர்களுடன் மூணாறுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார். அவர்கள் மூணாறு காலனி பகுதியில் தனியார் விடுதியில் தங்கினர்.ஆயிஷாபானுவிற்கு நேற்று காலை விடுதி அறையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆயிஷாபானுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை