உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நோய் பாதித்த தென்னையை அகற்றிட ரூ.ஆயிரம் மானியம்

நோய் பாதித்த தென்னையை அகற்றிட ரூ.ஆயிரம் மானியம்

போடி: தென்னை மறு நடவு, புத்துயிர் திட்டத்தின் கீழ் கேரள வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்ற மரத்திற்கு ரூ. ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் ராஜாமுருகன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தென்னையில் பழைய, பலன் அளிக்காத, நோயால் பாதித்த மரங்களை அகற்றி புதிய தென்னங் கன்றுகளை நடவு செய்திட தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. அகற்றப்படும் ஒரு தென்னை மரத்திற்கு ரூ.ஆயிரம், அகற்றிய மரத்திற்கு பதிலாக புதிய தென்னங் கன்றுகளை மறு நடவு செய்திட ஒரு தென்னங் கன்றுக்கு ரூ. 40 ம், தேவையான உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் தோட்டக்கலைத்துறை மூலம் மானியமாக வழங்கப்படுகிறது.தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மானியம் பெற உரிய ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ