உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆவணம் இன்றி கொண்டு வந்த வங்கி பணம் ரூ. 20 லட்சம் பறிமுதல்

ஆவணம் இன்றி கொண்டு வந்த வங்கி பணம் ரூ. 20 லட்சம் பறிமுதல்

போடி : தேனியில் இருந்து போடிக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 20 லட்சத்தை தேர்தல் நிலைக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் முனிராஜ் தலைமையில் நேற்று போடி - தேனி செல்லும் கோடங்கிபட்டி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேனியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து போடியில் உள்ள அதே வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வங்கி பணியாளர்கள் காரில் பணம் கொண்டு வந்துள்ளனர். காரை சோதனையிட்ட போது உரிய ஆவணம் இல்லாததால் ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்து போடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை