உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சித்திரை திருவிழாவில் அடிப்படை வசதிகள் செய்து தர பா.ஜ., மனு

சித்திரை திருவிழாவில் அடிப்படை வசதிகள் செய்து தர பா.ஜ., மனு

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் டூவீலர்கள் திருட்டை தடுக்க 4 நுழைவாயில் பகுதிகளில் வாகன நிறுத்தம் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்,' என மாவட்ட பா.ஜ., பொதுச் செயலாளர் மலைச்சாமி, வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் லோகநாதன் ஆகியோர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 7 முதல் 14 வரை நடக்க உள்ளது. கடந்தாண்டு பக்தர்களின் விலை உயர்ந்த நுாறுக்கும் மேற்பட்ட டூவீலர்க்ள் திருடு போனது. 22 டூவீலர்களின் உரிமையாளர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் இணைந்து 4 நுழைவுவாயில் பகுதிகளிலும் டூவீலர், வாகனங்கள் நிறுத்துமிடங்களை அமைத்து கண்காணிப்பில் ஈடுபடவும், போலீசார் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும்.பக்தர்களின் உடமைகளுக்கு பாதுகாக்க கூடுதல் மின்விளக்கு, சீருடையில்லா போலீசாரை நியமித்து கண்காணிக்க வேண்டும்.ராட்டினம் அமைத்துள்ள பகுதிகளில் கலெக்டர் அடிக்கடி ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தேவையான தற்காலிக கழிப்பறைகளை தேவைப்படும் இடங்களில் அமைக்க வேண்டும் என கோரினர். உடன் பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், தேனி ஒன்றிய செயலாளர் அறிவழகன், நகர பொதுச செயலாளர் ஜெயமுருகன், அமைப்பு சாரா மாவட்டத் தலைவர் மணிகணணன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை