| ADDED : மார் 22, 2024 05:27 AM
கம்பம்: பறக்கும் படை வாகனத்தில் இரவு பணி, பகலில் அலுவலக பணி என அலைக்கழிப்பதால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் புலம்புகின்றனர்.லோக்சபா தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கி உள்ளது.அரசியல் கட்சிகள் பெரும்பாலும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. வேட்பு மனு தாக்கல் முடிந்தவுடன் பிரசாரம் வேகம் எடுக்கும். - தேர்தல் விதி மீறல்களை தடுக்க பறக்கும் படை, எஸ்.எஸ். டி, டீம், வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ மதிப்பீட்டு குழு என பல குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.இக் குழுவினர் 24 மணி நேர பணியில், இரவு பணி பார்ப்பவர்கள், மறுநாள் பகலில் வழக்கமான அலுவலக பணிக்கு அழைக்கப்படுகின்றனர். தேர்தலில் இரவு பணி பார்ப்பவர்களை அலுவலக பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று புலம்புகின்றனர்.இரவு முழுவதும் கண் விழித்து காலையில் தூங்க சென்றால், அலுவலகத்திற்கு வாருங்கள் என்று அழைக்கின்றனர் . இதனால் மனமும், உடலும் பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.