உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு - மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட்டில் கடைகள் அகற்றம்

மூணாறு - மாட்டுபட்டி எக்கோ பாய்ண்ட்டில் கடைகள் அகற்றம்

மூணாறு: மூணாறு வட்டவடை ரோடு, தொடுபுழா, பாலா, பொன்குன்னம் ரோடு ஆகியற்றை தார் செய்து சீரமைப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 38.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை பயன்படுத்தி மூணாறு, வட்ட வடை இடையே ரோடு சீரமைக்கும் பணிகள் 2022 அக்டோபரில் துவங்கியது.ரோடு கடந்து செல்லும் வழியில் முக்கிய சுற்றுலா பகுதியான மாட்டுபட்டி 'எக்கோ பாய்ண்ட்'டில் ரோட்டின் இரு புறமும் நூற்றுக் கணக்கான கடைகள் உள்ளதால் ரோடு சீரமைக்கும் பணி பாதிக்கப்பட்டது.கடைகளை அகற்றுவது தொடர்பாக கடந்தாண்டு ஆக. 2ல் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சரக்குகள் கூடுதலாக கொள் முதல் செய்யப்பட்தால் கடைகளை அகற்ற கடந்த செப்., 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.அதன் பின் பல்வேறு காரணங்களால் கடைகளை அகற்றவில்லை. இந்நிலையில் எக்கோ பாய்ண்ட் பகுதியில் ரோடு சீரமைப்பதற்கு வசதியாக வர்த்தகர்கள் நேற்று தாமாக கடைகளை தற்காலிகமாக அகற்றினர். ரோடு பணிகள் பூர்த்தியானதும் மீண்டும் கடைகள் வைக்க அதிகாரிகள் உறுதியளித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ