உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீ விபத்தில் 170 மூடை வெங்காயம் எரிந்து சேதம்

தீ விபத்தில் 170 மூடை வெங்காயம் எரிந்து சேதம்

தேனி : தேனி அருகே கொடுவிலார்பட்டி விதை வெங்காய சேமிப்பு பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 மூடை விதை வெங்காயம் எரிந்து சேதமாகியது.கொடுவிலார்பட்டி பள்ளபட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கலைச்செல்வன் 39. இவருக்கு சொந்தமான விதை வெங்காய பட்டறை ஐஸ்வர்யா நகரில் உள்ளது. இப்பட்டறையில் 170 விதை வெங்காய மூடைகளை இருப்பு வைத்து இருந்தார்.பட்டறைக்கு அருகில் உள்ள காலியிடத்தில் வெங்காயத்தை கொட்டி தரம்பிரித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் 200 மீட்டர் துாரத்திலுள்ள குப்பையில் பற்றிய தீ காற்றில் பறந்து பட்டறை அருகே இருந்த காய்ந்த புற்களில் பற்றியது. இந்த தீ கலைச்செல்வனின் விதை வெங்காயம் மூடைகள், பட்டறையிலும் பற்றி முற்றிலும் எரிந்து சேதமானது. அங்கு பணிசெய்த தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதுதீயணைப்பு அலுவலர் சந்திரகுமார், உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை