உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 6.49லட்சம் ஒதுக்கீடு மாவட்டத்திற்கு பொங்கல் வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல்

6.49லட்சம் ஒதுக்கீடு மாவட்டத்திற்கு பொங்கல் வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல்

தேனி : தேனி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3.30 லட்சம் சேலைகள், 3.18 லட்சம் வேட்டிகள் என மொத்தம் 6 லட்சத்து 49ஆயிரம் வேட்டி, சேலைகள் பொதுமக்களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை ரேஷன் கடை பணியாளர்கள் சொந்த செலவில் கொண்டு செல்ல கூறி உள்ளதால் புலம்பி வருகின்றனர்.மாநில அரசால் பொங்கலை முன்னிட்டு ரேஷன் கார்டுதார்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வந்து விட்டன. அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பொங்கல் தொகுப்புடன் வேட்டி, சேலைகள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் முழுநேர, பகுதி நேர ரேஷன் கடைகள் என 526 செய்படுகிறது.இதில் தாலுகா வாரியாக தேனி 48,611 சேலைகள், 45,342 வேட்டிகள், பெரியகுளம் 55,951 சேலைகள், 53,566 வேட்டிகள், போடி 49,859 சேலைகள், 48,803 வேட்டிகள், ஆண்டிப்பட்டி 62,576 சேலைகள், 60,166 வேட்டிகள், உத்தமபாளையம் 1,13,854 சேலைகள், 1,10,449 வேட்டிகள் என மொத்தம் 3,30,851 சேலைகள், 3,18,326 வேட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இலவச வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தாலுகா அலுவலகங்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கடை விற்பனையாளர்கள் சொந்த செலவில் எடுத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். தாலுகா அலுவலகத்தில் இருந்து வெகுதுாரம் உள்ள ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் வாடகை அதிகம் செலவாகும் என்பதால் ரேஷன் கடை பணியாளர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் ரேஷன் பொருட்கள் கொண்டுவரும் லாரிகள் மூலம் இவற்றை ரேஷன் கடைகளுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை