உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில நீச்சல்போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில நீச்சல்போட்டி

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாநில பாரலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான ஜூனியர், சீனியர் நீச்சல் போட்டிகள் நடந்தன. போட்டியை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். போட்டிகள் உடற்தகுதி அடிப்படையில் 14 வகையான பிரிவுகளில் 83 வகையான போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் மாநில அளவில் 120 பேர் பங்கேற்றனர். இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்கள் மார்ச் 29 முதல் 31 வரை மத்தியபிரதேசம் குவாலியரில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகளை மாவட்ட பாரா ஒலிம்பிக் செயலாளர் சுமதி, நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை