| ADDED : ஜன 26, 2024 06:25 AM
தேனி: லோக்சபா தேர்தலுக்காக தேர்தல் கமிஷனின் பரிந்துரையில் தாலுகா அளவில் பணிபுரிந்த 50 எஸ்.ஐ.,க்கள், வேறு தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிடம் மாற்றம் செய்து சிவபிரசாத் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, அல்லிநகரம் எஸ்.ஐ., செந்தில்குமார் கம்பம் வடக்கு, தேனி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மலரம்மாள் பெரியகுளத்திற்கும், போடி நகர் பாண்டிச்செல்வி ஓடைப்பட்டிக்கும், சின்னமனுார் மாயன் தேனிக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 5 சப்டிவிஷன்களிலும் பணியாற்றிய 50 எஸ்.ஐ.,க்கள் தாங்கள் பணிபுரிந்த தாலுகாகளை விட்டு வேறு தாலுகாவிற்கு பணி மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.