உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  தீயணைப்பு துறை அலுவலகத்தில் ரூ. 2.51 லட்சம் பறிமுதல்

 தீயணைப்பு துறை அலுவலகத்தில் ரூ. 2.51 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி: தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ 2 லட்சத்து 51 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது திருநெல்வேலி மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியில் தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது துணை இயக்குநர் அலுவலகத்தின் பொறுப்பாகும். இதில் முறைகேடு நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையின் கூடுதல் எஸ்.பி. எஸ்கால் தலைமையில் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். துணை இயக்குநர் சரவணபாபு அமர்ந்திருக்கும் இருக்கைக்கு எதிர்புற அலமாரியில் உள்ள பைல்களுக்குள் 6 கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 2 லட்சத்து 24 ஆயிரத்து 100 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், துணை இயக்குநரின் டிரைவராக பணிபுரியும் தூத்துக்குடியை சேர்ந்த செந்திலிடம் ரூ.27,400 ரொக்கம் இருந்தது. மொத்தம் ரூ. 2,55,100 லஞ்சத் தொகை என சந்தேகிக்கப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை