உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூரை வீடு தீப்பிடித்து பொருட்கள் நாசம்

கூரை வீடு தீப்பிடித்து பொருட்கள் நாசம்

ஊத்துக்கோட்டை : பென்னலுார்பேட்டை போலீஸ் நிலைய காவல் எல்லைக்கு உட்பட்ட பங்காரம்பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ராஜேஸ்வரி. நேற்று முன்தினம் மாலை, வீட்டில் உள்ள காஸ் அடுப்பில் சமையல் செய்ய பற்ற வைத்தபோது, ரப்பர் தீப்பிடித்தது. தீ, 'மளமள' வென வீடு முழுதும் பரவியது.ராஜேஸ்வரி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கூரைவீடு முழுதும் தீப்பிடித்து, மளிகைப் பொருட்கள், துணிமணிகள், சான்றிதழ்கள் மற்றும் 30,000 ரூபாய் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், பென்னலுார்பேட்டை போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை