உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறிமுதல் செய்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பறிமுதல் செய்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

அவிநாசி;அவிநாசி அடுத்த தெக்கலுாரில் உள்ள ஆலம்பாளையம் பிரிவில் தேர்தல் நிலையான கண்காணிப்பு 'சி' பிரிவு குழுவினர் வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகி தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தெக்கலுார் பகுதியைச் சேர்ந்த கனகராஜ், 47, என்பவர் டூவீலரில் வந்துள்ளார். அவரை சோதனை செய்தபோது முறையான ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது.இதனால், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்த பணத்தை அவிநாசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, பறிமுதல் செய்த பணம் ஒப்படைக்கப்பட்டது.இதில், முறையான ஆவணங்கள் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கான வங்கி கணக்குகளை கனகராஜ், வருமான வரித்துறையினரிடம் கொடுத்தார். விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கனகராஜிடம், துணை தாசில்தார் அழகரசன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை