உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்டாப்பில் நின்றால் மழைநீர் தெறிக்கும்

ஸ்டாப்பில் நின்றால் மழைநீர் தெறிக்கும்

குப்பை தேக்கம்திருப்பூர், ஓம் சக்தி நகர் இரண்டாவது வீதியில், தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். கண்ணாடிகள் வீசியெறியப்படுகின்றன.- சுப்பு, ஓம் சக்தி நகர்.கொசு ராஜ்ஜியம்திருப்பூர், தோட்டத்துப்பாளையம், காமாட்சி அம்மன் கோவில் மேற்கு வீதி, மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகமாகிறது.- முரளி, தோட்டத்துப்பாளையம்.துரத்தும் நாய்கள்திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கின்றன.- செல்வராஜ், மீனம்பாறை.கரடுமுரடு சாலைஊத்துக்குளி, சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி, இரண்டாவது வார்டு, குளத்துப்பாளையத்தில் சாலை கரடுமுரடாக உள்ளது. ரோடு போட வேண்டும்.- மோகன், சர்க்கார் பெரியபாளையம்.சாலை மோசம்திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் ரோடு மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். ரோடு போட வேண்டும்.- தேவராஜன், ராக்கியாபாளையம் பிரிவு.வீணாகும் தண்ணீர்திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- சங்கர்சதீஷ், ஊத்துக்குளி ரோடு.தண்ணீர் தேக்கம்திருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் ஸ்டாப்பில் மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கி விடுகிறது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது, ஸ்டாப்பில் நிற்பவர் மீது மழைநீர் தெறிக்கிறது.- சங்கர், வளையங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை