உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணியாம்பூண்டி ஊராட்சியில் கனியாத அடிப்படை வளர்ச்சி

கணியாம்பூண்டி ஊராட்சியில் கனியாத அடிப்படை வளர்ச்சி

திருப்பூர்;'கணியாம்பூண்டியில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு தலைவர் ரஹீம் அங்குராஜ், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு; பொங்கு வழி தோட்டத்தில் ரயில்வே பாலத்தின் கீழ், கரடுமுரடான பாதையில் மக்கள் பயணிக்கின்றனர்; இப்பாதையை சரி செய்ய வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்.கணியாம்பூண்டி ஊராட்சியில், குப்பைத் தொட்டி மற்றும் சாலையோரம் பொதுமக்களால் போடப்படும் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை.தினமும், குப்பை எரியூட்டப்படுவதால், புகைமாசு ஏற்படுகிறது. பெரும்பாலான தெருக்களில் சாக்கடை வசதி இல்லை. கழிவுநீர், தெரு மற்றும் சாலை மீது ஓடுகிறது. பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன; சாலைகளும் அமைக்கப்படுவதில்லை.ஊராட்சி துவக்கப்பள்ளி எதிரே உள்ள நிலத்தில், அந்நிலத்தின் உரிமையாளர் சாக்கடை கட்டுவதற்காக, ஊராட்சிக்கு நிலத்தை தானமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு, வழங்கப்பட்டிருந்தால் அந்நிலம் ஊராட்சி பெயரில் கிரையம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு, கிரயம் செய்யப்பட்டதாக தெரிய வில்லை; இதுகுறித்து, தெளிவுபடுத்த வேண்டும்.வீடுகளில் ஆழ்துளை கிணறு அமைக்க, ஊராட்சி தலைவரின் அனுமதி பெற வேண்டும். ஆனால், சுபஸ்ரீ கார்டனில், ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்க ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது; உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.ஊராட்சியில் வரி வசூல் பணி மந்தமாக உள்ளது. 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. புதிய வரிகளையும் போடாமல் உள்ளனர். 12 ஆண்டுகளாக இங்குள்ள ஊராட்சி செயலரின் பணியில் திருப்தியில்லை.இவ்வாறு, மனுவில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை