உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டோரம் நடக்கும் வாரச்சந்தை நெரிசலால் பொதுமக்கள் பாதிப்பு

ரோட்டோரம் நடக்கும் வாரச்சந்தை நெரிசலால் பொதுமக்கள் பாதிப்பு

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதிகளில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் செயல்படும், தற்காலிக சந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரசுத்துறைகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், ரோட்டோரங்களில் நடத்தப்படும் இத்கைய வாரச்சந்தைகளால், நுகர்வோருக்கு பாதுகாப்பில்லாத நிலை காணப்படுகிறது. உதாரணமாக, குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல்நகரத்தில், பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, வாரம்தோறும் வியாழக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது.ரோட்டோரத்தில், 15க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, காய்கறி உட்பட அனைத்து பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். சந்தைக்கு வரும் வாகனங்கள் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் அப்பகுதியில், சந்தை நாளன்று, நெரிசல் அதிகரித்து விபத்தும் ஏற்பட்டது.இவ்வாறு, பாதுகாப்பு இல்லாமல், முறையான அனுமதி பெறாமல் நடத்தப்படும் சந்தைகள் குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை