உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்தி அணையில் மின் உற்பத்தி துவக்கம்

திருமூர்த்தி அணையில் மின் உற்பத்தி துவக்கம்

உடுமலை;உடுமலை திருமூர்த்தி அணையில், 1.95 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி., முதல் மண்டல பாசன நிலங்களுக்கு தற்போது, இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால், திருமூர்த்தி அணை, பிரதான கால்வாய் வழித்தடத்தில் அமைந்துள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தியும் துவங்கியுள்ளது. இதன் வாயிலாக, தினமும் சராசரியாக, 48 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.கோடை காலத்திலும், நீர் மின் உற்பத்தி செய்யப்படுவதால் பயனுள்ளதாக உள்ளது. 25 நாட்கள் வரை இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்படுவதால், தொடர்ந்து நீர்மின் உற்பத்தியும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு நீர் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை