உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடை முன் கருப்பு கொடி வணிகர்கள் தீர்மானம்

கடை முன் கருப்பு கொடி வணிகர்கள் தீர்மானம்

அவிநாசி;அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகளுக்கு முன்பாக கருப்பு கொடியேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அவிநாசி அனைத்து வணிகர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் பஷீர் தலைமை வகித்தார். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெகதீஸ்வரன், பொருளாளர் மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சங்க முன்னோடிகள் தாமோதரன், ஈஸ்வரன், தங்கவேல், சுந்தர வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:அவிநாசியில் நீண்ட நாட்களாக சாலையோர வியாபாரிகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி, குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் முறையாக அரசுக்கு கட்டி தொழிலாளர்களுக்கு சம்பளம், கடை வாடகை, மின் கட்டணம் ஆகியவை செலுத்தி கடைகளை நடத்த சிரமப்பட்டு வருகிறோம்.இதுகுறித்து தமிழக அரசின் கவனம் ஈர்க்கும் வண்ணம் அவிநாசி சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த ஒருநாள் அடையாளக் கடையடைப்பு உட்பட பலகட்ட போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளை, வாரச்சந்தை வளாகத்தில் அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதனை முறைப்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.முன்னதாக, தமிழக அரசையும், பேரூராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும் அவிநாசி அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்கள் தங்களது கடைகளுக்கு முன் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை