| ADDED : மார் 25, 2024 12:48 AM
பல்லடம்;பல்லடம் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், உலக நுகர்வோர் தின விழா கொண்டாடப்பட்டது. அதன் தலைவர் மணிக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தங்கராஜ், துணைத் தலைவர் சுனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் நாகராஜன் வரவேற்றார்.கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்:கோடைக்காலம் என்பதால் பழங்கள், ஜூஸ், குளிர்பானங்கள் அதிகளவு விற்பனை ஆகிறது. இவற்றில், தரமற்ற பழங்கள் குளிர்பானங்கள் விற்பனை மேலோங்கி வருவதால், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இதை தடுக்க வேண்டும்.கடைகளில் தரமற்ற சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதால், அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல்லடம் பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட் பகுதிகளில் வாடகைக்கு கடை நடத்தும் வியாபாரிகள் சிலர், ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். சந்தைக்கு உள்ளேயே வாகனங்களும் வந்து செல்கின்றன. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் நகரில் ஏற்பட்டு வரும் கடும் போக்கு வரத்து நெரிசலை தடுக்க, நகரப் பகுதியில் கட்டாயம் மேம்பாலம் அமைக்க வேண்டும்.கடந்த ஆண்டு நடந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட பல மனுக்களுக்கு இதுவரை நடவடிக்கை இல்லை. மனுக்களின் மீதான நடவடிக்கை என்ன என்பதை வருவாய்த்துறை விளக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.