மேலும் செய்திகள்
எரிமேடையில் தீக்குளித்து போலீஸ்காரர் தற்கொலை
07-Nov-2025
கோவிலில் தேங்கியுள்ள மழைநீர்: பக்தர்கள் அவதி
06-Nov-2025 | 1
வேலுார் : காட்பாடி அருகே பலாத்காரம் செய்ததில், 16 வயது சிறுமி கர்ப்பமானார். போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர். வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர், தொழிலாளி வேல்முருகன், 24. இவர், கடந்த சில மாதங்களாக, 16 வயது சிறுமியிடம் நண்பர் போல் பழகி வந்தார். அப்போது, திருமண ஆசை காட்டி சிறுமியை தனியாக அழைத்துசென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி தற்போது, நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், உடல் நலம் பாதித்த சிறுமியை, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. காட்பாடி அனைத்து மகளிர் போலீசார், விசாரித்து வேல்முருகன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக அவரை தேடி வருகின்றனர்.
07-Nov-2025
06-Nov-2025 | 1