| ADDED : ஆக 18, 2024 04:59 AM
விழுப்புரம் : வளவனுார் அருகே விவசாயி மின்சாரம் தாக்கி இறந்தார்.விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் பெருமாள், 69; இவர், நேற்று வளவனுார் அடுத்த சுந்தரிப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். விழுப்புரம்
காணை அடுத்த ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 55; இவர், நேற்று தனது வீட்டில் டியூப் லைட் எரியவில்லை என சரி செய்துள்ளார். அப்போது மெயினை ஆப் செய்யாமல், ஒயரை வாயால் கடித்த போது, மின்சாரம் தாக்கி இறந்தார்.காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.