உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி சாராய சம்பவங்களால் பொறுப்பேற்க தயக்கம்

தனிப்பிரிவில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி சாராய சம்பவங்களால் பொறுப்பேற்க தயக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சாராய வழக்கு கெடுபிடியால் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்க தயக்கம் காட்டுவதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6௭ பேர் இறந்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக, கள்ளக்குறிச்சி மற்றும் பக்கத்து மாவட்டமான விழுப்புரத்தில், கள்ளச்சாராயம் வழக்குகளில் சிக்கிய போலீசார் சஸ்பெண்ட் மட்டுமின்றி, பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதில், விழுப்புரம் மாவட்டத்தில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் வேலுார் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த பொறுப்பிற்கு வர தகுதியுள்ள இம்மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் பலரும் சாராய வழக்கு குற்றவாளிகளை பிடிப்பதற்கான கெடுபிடிகள் தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகமாக உள்ளதால் தயங்குகின்றனர்.கள்ளச்சாராய வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை பிடித்தாலும், அவருக்கு பின்னால் உள்ள அதிகாரமிக்க வி.ஐ.பி.,க்களை சமாளிக்க வேண்டும் என்றும், இவரை சமாளித்தால், தங்களின் உயர் அதிகாரிக்கு பதில் கூறவும், பணிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தனிப்பிரிவில் பொறுப்பேற்க தயங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி