உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உரத்திற்காக நெட்டி செடிகள் வளர்ப்பு மண் வளத்திற்கு வலு சேர்ப்பதால் விவசாயிகள் ஆர்வம்

உரத்திற்காக நெட்டி செடிகள் வளர்ப்பு மண் வளத்திற்கு வலு சேர்ப்பதால் விவசாயிகள் ஆர்வம்

காரியாபட்டி-மண் வளத்தை பாதுகாத்து, இயற்கை உரமாக பயன்படுத்த விவசாயிகள் வயல்களில் நெட்டி செடிகளை வளர்த்து வருகின்றனர்.காரியாபட்டி முஷ்டக்குறிச்சி, பல்லவரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மண் வளத்தை பாதுகாத்து இயற்கை உரமாக பயன்படுத்த விவசாயிகள் வயல்களில் நெட்டி செடிகள் வளர்த்து வருகின்றனர். செயற்கை உரங்கள் இட்டதால் மண் வளம் பாதிக்கப்பட்டதோடு செடிகளுக்கு சத்து குறைபாடு ஏற்பட்டு விளைச்சல் காண்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனை போக்கி, நல்ல விளைச்சல் காண விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் கொழிஞ்சி, நெட்டி செடிகளை இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். அதன் அடிப்படையில் பல்லவரேந்தல் பகுதியில் நெட்டி செடிகள் அதிக அளவில் வயல்களில் விவசாயிகள் வளர்ந்து வருகின்றனர்.விவசாயி அழகர்சாமி கூறுகையில், மண்வளத்தை பாதுகாத்து விளைச்சல் காண்பதற்கு பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர். குறைந்த செலவில் நெட்டி, கொழிஞ்சி விதைகளை வயல்களில் விதைத்து விட்டு தண்ணீர் விட்டால் போதும். ஆள் உயரத்திற்கு நன்றாக வளர்ந்துவிடும். உரிய காலத்தில் அப்படியே உழவு செய்து செடிகளை மடக்கி விட்டால் போதும். ஈரப்பதத்தை தாங்கி பிடித்து மண் வளத்தை காத்து, செடிகள் நன்றாக முளைத்து நல்ல பலன் தரும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை