உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

சிவகாசி:சிவகாசியில் நிலவும் தொடர் மின்தடை, பட்டாசு ஆலைகள் மூடல் போன்றவற்றால், வியாபாரம் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. சிவகாசியில் தினமும் 12 மணி நேரம் மின்தடை நிலவுகிறது. 300க்கும் மேற்பட்ட அச்சகங்கள் பாதிக்கின்றன. உபதொழில்களும் முடங்கி உள்ளன. டைரி, காலண்டர் தயாரிப்பு பணிகளை, உரிய நாட்களில் முடிக்க முடியவில்லை. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். நகரில் பெட்டி கடை முதல் ஓட்டல் வரை வியாபாரம் மந்தமாக உள்ளது. இதை கணடித்து, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், 'மின்சாரத்திற்கு கண்ணீர் அஞ்சலி' என, குறிப்பிட்டு, சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை