உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்

 கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தி யில் உள்ளனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் 2022ல் 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ 6.50 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வரவில்லை. திறப்பு விழா காண்பதற்கு முன்பாகவே வளாகத்தில் கதவு சேதம் அடைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் கட்டட மும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதனை சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள், முட் புதர்கள் அடர்ந்து செல்வதற்கு பாதை இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் தற்போது வரையும் திறந்த வெளி யினையே கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். எனவே சுகாதார வளாகத்தின் சுற்றிலும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அகற்ற வேண்டும். மேலும் பாதை, மின்சாரம், தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை