| ADDED : ஜூலை 11, 2024 02:38 AM
சென்னை:ஜகத்குரு பாரதீ தீர்த்த மஹா சுவமிகளின் சன்யாச சுவீகார பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் சிருங்கேரியில்ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் நடைபெறுகிறது.வியாசர் வடமொழியில் இயற்றிய 18 புராணங்களில் ஒன்று ஸ்ரீமத் பாகவதம்; 18,000 சுலோகங்களைக் கொண்டது. ஸப்தாஹம் என்றால் ஏழு நாட்கள் கொண்ட காலவரை. இக்காலவரையில் ஸ்ரீமத்பாகவதத்தைப் படிப்பதும் கேட்பதும் ஒரு உயரிய திட்டமுறையாகக் கருதப்படுகிறது.ஜகத்குரு பாரதீ தீர்த்த மஹா சுவாமிகளின் சன்யாச சுவீகார பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் சுவர்ண பாரதீ எனும் வைபவம் இந்த ஆண்டு முழுதும் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக வரும் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் நடைபெறுகிறது. இதில் 108 வித்வான்கள் பங்கேற்கின்றனர்.தினசரி நிகழ்வில் ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு சஹஸ்ர நாம உபன்யாசம், ஆதிசங்கர ஸ்தோத்திர பாராயணம், நாம சங்கீர்த்தனம், லட்ச வாசுதேவ துவாதஸாக்ஷரி ஜபம், மஹாபூஜை ஆகியவை நடைபெற உள்ளன. இதன் நேரலையினை Sringeri.net 'யூ -டியூப்' சேனல் வாயிலாக கண்டுகளிக்கலாம்.