உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மசாலா பொருளில் கலப்படம்; சிக்கலில் பிரபல நிறுவனங்கள்

மசாலா பொருளில் கலப்படம்; சிக்கலில் பிரபல நிறுவனங்கள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபல நிறுவனங்களின் மசாலாவில் நடத்தப்பட்ட சோதனையில் 12 சதவீத பொருட்கள் தரமற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவில் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் ஆகியவை பிரபலமான மசாலா தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால் இந்நிறுவனங்களின் தயாரிப்புகளை பிரிட்டன், நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டன. ஹாங்காங் இந்த நிறுவனங்களின் மசாலப் பொருட்களின் தயாரிப்புக்கு தடை விதித்து விட்டது.இதனால் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளில் மாதிரிகளை எடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம் சோதனைக்கு அனுப்பியது. அதில் 12 சதவீதம் மாதிரிகள் தரமற்று இருப்பது தெரிய வந்துள்ளது.ஆனால் தங்களின் தயாரிப்புகள் தரமானவை என்றும், பாதுகாப்பானவை என்றும் எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.மாதிரிகளின் சோதனை விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க இருப்பதாகவும், தரமற்ற மசாலா தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

shakti
ஆக 20, 2024 14:34

இங்கேயும் ... மசாலா என்று பல பெயர்களில் விற்றுக்கொண்டு இருக்கிறார்களே


Sampath Kumar
ஆக 20, 2024 11:34

அப்பாவி மக்கள் சாவார்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 20, 2024 11:03

சமீபத்தில் மயில் மார்க் நிறுவனப்பொருட்களில் அளவுக்கு பலப்பல மடங்கு கூடுதலாக இரசாயனம் கலந்திருப்பதாக கண்டு பிடித்தார்களே, என்ன தண்டனை கொடுத்தார்கள்? இன்னமும் இரயில் முழுவதும் பல கோடிகள் செலவில் அவர்கள் விளம்பரம்தான். இரசாயனம் கலந்த பொருட்களும் சந்தையில் பெருமளவு விற்பனை ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன.


ram
ஆக 20, 2024 10:44

எவெரெஸ்ட் சிறுபான்மை நிறுவனம் மேல் நடவடிக்கை எடுத்தால் திருட்டு திமுக காங்கிரஸ் ஆட்களுக்கு கோபம் வந்து விடும்,


VENKATASUBRAMANIAN
ஆக 20, 2024 08:21

எப்எஸ்எஸ்ஐ விளக்கம் அளிக்க வேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை