சென்னை: தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உட்பட 19 மாநிலங்களுக்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக, சிறப்பு பிளீடர்கள் 125 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டில்லி, அசாம், தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உட்பட, 19 மாநிலங்களில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்குகளில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக, சிறப்பு பிளீடர்களை நியமித்து, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில், அமலாக்கத்துறை வழக்குகளில் ஆஜராக, வழக்கறிஞர்கள் வி.லோகேஷ், எஸ்.ராமமூர்த்தி, வி.கே.ராஜசேகர், ஜி.பிரபு, கே.எத்திராஜுலு, மீரா ஞானசேகர் உட்பட, 13 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.