உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் : சரத்குமார்

காமராஜர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் : சரத்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ஜ., உறுப்பினர் நடிகர் சரத்குமார்: எந்த பேருதவியும் இல்லாமல், நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், என் கட்சியை நடத்தி மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கிறேன். காமராஜர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என, செயல்பட்டிருக்கிறேன். பதவியில் இருந்தால் தான் நம் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை கடந்து, சமத்துவ மக்கள் கட்சி, பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்.டவுட் தனபாலு: கட்சியை துவங்குனீங்க என்பது சரி... அதை நடத்தினேன் என்று சொல்வது தான் இடிக்குது... தமிழகத்துல லட்டர் பேடு அளவுல இயங்குற நடிகர்கள் கட்சி எதுன்னு ஒரு போட்டி வைச்சா, டி.ராஜேந்தரின் லட்சிய தி.மு.க., கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கு அடுத்து உங்க கட்சிதான் வந்திருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: கர்நாடகா எப்போது பார்த்தாலும் தண்ணீர் தர மாட்டேன் என்று தான் சொல்லும். எந்த கர்நாடக அமைச்சராவது, 'நாங்கள் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுகிறோம்' என சொல்லியதை கேள்விப்பட்டு உள்ளீர்களா? ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் சென்று, தண்ணீரை பெறுகிறோம். இம்முறையும் தண்ணீரை திறக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தை அணுகி பெறுவோம்.டவுட் தனபாலு: நீங்க சொல்வது வாஸ்தவம் தான்... ஆனா, கர்நாடகாவுல இப்ப தண்ணீர் தட்டுப்பாடு படுமோசமா இருக்குது... அவங்க இருக்கிற சூழல்ல, நமக்கு தண்ணீர் தராம இருந்தாலும் பரவாயில்லை... நம்மிடம் தண்ணீர் கேட்காம இருந்தாலே, அது பெரிய உதவி என்பதில், 'டவுட்'டே இல்லை!தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு: தன் பிறந்த நாள் பரிசாக, லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வெற்றிகளை குவிக்க அரசியல் தந்திரம், வியூகம் மற்றும் என்னென்ன கடமைகள் செய்ய வேண்டுமோ, அவற்றை நாம் செய்ய வேண்டும்.டவுட் தனபாலு: என்ன பெரிய தந்திரம், வியூகம்... ஓட்டுக்கு இவ்வளவுன்னு ரேட் நிர்ணயம் பண்ணுவீங்க... அதை, பக்காவா பட்டுவாடா பண்ணுவதில் தான் உங்க தந்திரம், வியூகம், கடமை எல்லாம் அடங்கியிருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

aaruthirumalai
மார் 15, 2024 19:40

பாவம் அந்த மனிதர் இருந்தால் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்வார். இவர் போன்றவர்களால் பழங்கால மனிதர்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.


venugopal s
மார் 15, 2024 18:20

இதை எல்லாம் பார்க்காமல், நல்லவேளை காமராஜர் இறந்து விட்டார்.


Paraman
மார் 15, 2024 14:55

அண்ணாமலை பிஜேபி தமிழகத்தில் ஆட்சியை பிடித்தால் தான் முதல்வராக மாட்டேன் என்று சொன்னது இந்த நாட்டாமைக்கு எப்போதும் போல ஒரு குறுக்கு வழியை காட்டியுள்ளது ....இப்போதில் இருந்தே துண்டை போட்டு சீட்டை பிடிச்சி தன் மாமியார் கனவை நெனவாக்கிடலாம்ன்னு சினேக் பாபு ஸ்டைல்ல பிளான் பண்ணிக்கிறாரு ...


Narayanan
மார் 15, 2024 12:27

காமராஜர் காலம் வேறு . அவரைபோல் ஒரு தலைவரை காண்பது கடினம் . மேலும் ஐம்பது ஆண்டு ஆட்சியில் இந்த திராவிட ஆட்சியாளர்கள் மக்களை மாற்றிவிட்டார்கள்


Sampath Kumar
மார் 15, 2024 11:51

அதாவது நீக்க முதல்வராக வேண்டும் அம்புட்டு ஆசை


Anantharaman Srinivasan
மார் 15, 2024 11:27

சரத்குமாரா..காமராஜர் ஆட்சியா? நீ பிஜேபி யில் இணைந்த பின்பா..? இவ்வளவு காலம் உன் சொந்த பணத்தில் கட்சியை வளர்த்து காப்பாற்றியதாக சொல்கிறாய். இனி பிழைக்கும் வழியை பார். ஏழை குடிலும் குபேரன் கோட்டையும் ஒன்றா..?காமராஜர் ஆட்சிக்கும் நீ சேர்ந்திருக்கும் இடத்துக்கும் சரிபடாது..


வேணு
மார் 15, 2024 10:18

வடக்கே ராமராஜ்யா வந்தாச்சு. இங்கே காராஜராஜ்ராஜ்யாதான் பாக்கி


பொ.ஜெயராஜ், பாமப னார், இடுக்கி மாவட்டம், கேரளா .
மார் 15, 2024 09:38

காமராஜர் ஆட்சி என்பது நேர்மையான, எளிமையான, தூய்மையான, புனிதமான, தொலைநோக்கு சிந்தனையுடன் நடந்த பொற்கால ஆட்சி . அரசியலுக்கே இலக்கணமான ஆட்சி. அத்தகைய ஆட்சியை இன்றைய அரசியல்வியாதிகளால் ஒரு நாளும் தர முடியாது. எனவே, இனிமேல், காமராஜர் ஆட்சி என்பது நமக்கு வெறும் கானல் நீரே.


Indian
மார் 15, 2024 08:43

இப்போ உள்ள ஆட்சி சிறப்பாகவே உள்ளது ...


angbu ganesh
மார் 15, 2024 09:37

ehac


angbu ganesh
மார் 15, 2024 09:38

ஏதாச்சும் கனவு கனவுல இருக்கீங்களா பிரதர், அட தேவுடா


Kanagaraj M
மார் 15, 2024 08:31

உங்க கட்சியைத்தான் பிஜேபி -ல இணைத்துவிட்டீர்களே, அப்புறம் என்ன காமராசர் ஆட்சி கொடுக்கப்போறீங்க?.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ