உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

டாஸ்மாக் ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கடலுார் : கடலுார், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை கன்னிக்கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன், 55; சிதம்பரம் எலைட் டாஸ்மாக் கடை விற்பனையாளர். இவரது முதல் மகன் சிலம்பரசன், சென்னை பட்டாலியனில் போலீசாக உள்ளார். இரண்டாவது மகன் தனுஷ் கல்லுாரியில் படித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு மோகன், அவரது மனைவி இருவரும் வீட்டிலும், தனுஷ் அதே தெருவில் உள்ள உறவினர் வீட்டிலும் துாங்கினர். அப்போது, மோகன் வீட்டின் முன் பயங்கர வெடி சத்தம் கேட்டது.எதிர் வீட்டுக்காரர் வெளியில் வந்து பார்த்தபோது, மோகன் வீட்டின் கிரிலில் இருந்த திரைசீலை எரிந்து கொண்டிருந்தது. உடன், தனுசுக்கு போன் செய்து வரவழைத்து தீயை அணைத்தார். அதன் பிறகே மோகன் வீட்டின் உள்ளே இருந்து வெளியில் வந்தார்.எஸ்.பி., ராஜாராம், கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதில், அங்கு பெட்ரோல் குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. கடலுார் புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை