மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு மிஷின்களில் முதல்கட்ட சோதனை
3 minutes ago
37 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
3 minutes ago
மருத்துவ மாணவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
3 minutes ago
தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்
6 minutes ago
சென்னை: மது கடைகளில் காலி மது பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து, 'டாஸ்மாக்' தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், சென்னை சிவானந்தா சாலையில் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, கூட்டு நடவடிக்கை குழுவினர் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக டாஸ்மாக் கடைகளில், மது பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் பெற்று, காலி பாட்டிலை கொடுத்ததும், 10 ரூபாயை திரும்ப பெறலாம். இத்திட்டத்தை செயல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இத்திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், அத்திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல், மது கடை ஊழியர்கள் மீது நிர்வாகம் திணித்து வருகிறது. ஏற்கனவே கடைகளில் இடநெருக்கடி மற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை உள்ளது. காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் கடை ஊழியர்களை ஈடுபடுத்தாமல், மாற்று திட்டத்தை உருவாக்க, தொழிற்சங்கங்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளன. ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் அதை பின்பற்றாமல், ஊழியர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். எனவே, காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்தி வைப்பதுடன், அதை ஊழியர்கள் மீது திணிப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 minutes ago
3 minutes ago
3 minutes ago
6 minutes ago