உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய யாத்திரை முடித்து காஞ்சி திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; பக்தர்கள் உற்சாக வரவேற்பு

விஜய யாத்திரை முடித்து காஞ்சி திரும்பினார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; பக்தர்கள் உற்சாக வரவேற்பு

காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இன்று (20ம்தேதி) காஞ்சிபுரத்திற்கு வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2022 மார்ச் மாதம் விஜய யாத்திரை புறப்பட்டு, ராமேஸ்வரம், ஆந்திரா, தெலங்கானா, காசி, உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு விஜயம் செய்தார். அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்று அருளாசி வழங்கினார். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் ஜோதிர்லிங்க க்ஷேத்திரமான மல்லிகார்ச்சுன சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார். திருப்பதியில், சந்திர மவுலீஸ்வர பூஜை செய்து கொண்டு, அதன் தொடர்ச்சியாக விஜய யாத்திரை புரிந்து, இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு திரும்பினார். சுவாமிகளுக்கு காஞ்சி சங்கர மடம், காஞ்சி நகர வரவேற்பு கமிட்டி சார்பிலும், நகரவாசிகள், பல்வேறு ஆன்மிக அமைப்புகள், திருக்கோவில் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு திருக்கோவில்களில் பிரசாதங்களுடன் பூரண கும்ப மரியாதை, மங்கல வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீபெரியவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நகர பவனி ஊர்வலம் நடந்தது. மடம் திரும்பிய சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரையும், பிரசாதமும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vadakkuppattu Ramanathan
மார் 21, 2024 10:48

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர


????????????????????
மார் 21, 2024 07:43

???????? ???????????????? ???????????????????? ???????????? ???????????????????????? ???????? ???????????? ???????????????? ???????????????????????? ???????????????????????????????????? ???????? ???????????????????????? ???????? ???????????? ????????????????????????????????.


Ramesh Sargam
மார் 20, 2024 23:34

சங்கரம் போற்றி. சங்கராச்சார்யம் போற்றி. ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர. ஓம் நம சிவாய. ஓம் நமோ நாராயணாய.


uma sridharan
மார் 20, 2024 20:57

வருக வருக தங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்களை வணங்கும் பாக்கியம் எப்போது கிட்டுமோ.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ