மேலும் செய்திகள்
ஒயிட் சிமென்ட் அடிக்காமல் பட்டி வைக்கலாமா?
13-Dec-2025
பொதுவாக கான்கிரீட் கட்டடங்களில் நீர்க்கசிவு ஏற்படுவதற்கு கட்டுமான பணியிலும், அதற்கு பிந்தைய பராமரிப்பிலும் ஏற்படும் அலட்சியமே காரணமாக அமைகிறது. இந்த இரண்டு நிலையிலும் மக்கள் அலட்சியத்தை தவிர்த்து கூடுதல் விழிப்புடன் இருந்தால் கட்டடங்களில் நீர்க்கசிவால் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கலாம்.இன்றைய சூழலில், கான்கிரீட் தான் கட்டடங்கள் கட்டுவதற்கு பிரதான பொருளாக உள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. கான்கிரீட்டுக்கு மாற்றாக பல்வேறு புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், பயன்பாட்டு நிலையில் கான்கிரீட்டுக்கான முக்கியத்துவம் இன்னும் அப்படியே உள்ளது. கான்கிரீட் கலவை தயாரிப்பதில் தண்ணீர் பிரதான பொருளாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் தண்ணீர் தான் அதன் உறுதி தன்மைக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக கட்டடங்களில் மேல் தளத்தில் தேங்கும் தண்ணீர் தான் பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. கட்டடங்கள் கட்டி முடித்துவிட்டு, அதில் குடியேறிய நிலையில், மொட்டை மாடியை முறையாக பராமரிப்பதில் மக்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக, 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மேல் தளத்துக்கு சென்று அங்கு காணப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்.குறிப்பாக, மழை நீர் வெளியேறுவதற்கான குழாய் இணைப்புகள் உள்ள பகுதியில் மரங்களில் இலைகள், குப்பை அடைத்து இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் இந்த குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கினால், அது கட்டடத்துக்குள் கசிய துவங்கிவிடும். கட்டுமான நிலையில் கான்கிரீட் தளத்தில் மேல் உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து இருந்தால், தண்ணீர் வெளியேறுவதற்கான வாட்டம் அமைந்து இருக்கும். இதனால், மழை பெய்த சில மணி நேரங்களில் தண்ணீர் முழுமையாக வெளியேறிவிடும். மொட்டை மாடியில் கான்கிரீட் தளத்தில் மேல், சொருகு ஓடுகள் பதிக்கும் பழக்கம் குறைந்து தற்போது வெப்பத்தடுப்பு பதிகற்கள் அமைக்கப்படுகின்றன. இது ஒன்றும் தவறில்லை என்றாலும், இதற்கான பணிகளில் உரிமை யாளர்கள் மிக கவனமக இருக்க வேண்டும். குறிப்பாக, மேல் தளத்தில் அமைக்கப்படும் பதிகற்களின் இணைப்பு பகுதிகளில் நீர் புகாத வகையில், பூச்சு வேலை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலான இடங்களில் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி அமைப்பவர்கள் அது நிரம்பி வழியும் போது, உபரி நீர் மொட்டை மாடியில் கொட்டும் வகையில் கட்டுகின்றனர். இதை தவிர்த்து உபரி நீர் மொட்டை மாடியில் விழாத வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதற்கான குழாய்களை உரிய முறையில் திட்டமிட்டு, உபரி நீர் செடிகளுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்வது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
13-Dec-2025