உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இட ஒதுக்கீட்டை பா.ஜ., அரசு ரகசியமாக பறித்து வருகிறது: ராகுல் குற்றச்சாட்டு

இட ஒதுக்கீட்டை பா.ஜ., அரசு ரகசியமாக பறித்து வருகிறது: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசுப்பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ., அரசு ரகசியமாக பறித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதே மோடி அரசின் தாரக மந்திரம். மூங்கில் இல்லை என்றால், புல்லாங்குழல் இசைக்க முடியாது. இதன் அர்த்தம், அரசுப்பணி இல்லை என்றால், இட ஒதுக்கீடு இருக்காது.கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மூலம், அரசுப்பணிகளை ஒழித்துக்கட்டி , தலித்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பாஜ., அரசு ரகசியமாக பறித்து வருகிறது.2013ல் பொதுத்துறை நிறுவனங்களில் 13 லட்சம் நிரந்தர பணியிடங்கள் இருந்த நிலையில் 2023ல் அது 8.4 லட்சமாக குறைந்துவிட்டது. பிஎஸ்என்எல், செயில், பெல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் 6 லட்சம் பணியிடங்களை ஒழிக்கப்பட்டன. இந்த பணியிடங்கள் தான், இடஒதுக்கீட்டின் பலன்களை அளித்தது.ரயில்வே உள்ளிட்ட நிறுவனங்களில், அரசுப் பணிகளை ஒப்பந்த முறைக்கு மாற்றியதன் மூலம் ஒழிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிலடங்காதவை. மோடி அரசின் தனியார்மயமாக்கல் என்பது நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது. இதன் மூலம், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை பறிப்பது.பொதுத்துறை நிறுவனங்களை வலிமையாக்குவதுடன், 30 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பி, அனைத்து சமுதாயத்திற்கான வேலைவாய்ப்பு கதவுகளை திறப்போம் என காங்கிரசின் உத்தரவாதமாக அளிக்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

சூரியா
மே 03, 2024 05:50

இட ஒதுக்கீடு என்பது, ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது தரத்தை மேம்படுத்துவதற்காக. ஆனால் தமிழக ஜாதீயக் கட்சிகளும், இடது சிந்தனை சினிமா பிரபலங்களும் இன்னமும் உயர்சாதிக்காரர்களைக் குறை கூறி வருகிறார்கள். அவர்களது எண்ணமும் செயல்களும் உயர் ஜாதிக்காரர்கள் தங்களது நிலைக்கு இறங்க வேண்டும் என்பதே!


RAAJ68
மே 02, 2024 22:30

உங்களை மக்கு என்று விமர்சித்தார் சுப்பிரமணிய சுவாமி பதிலடி கொடுக்கவில்லையா


Lion Drsekar
மே 02, 2024 18:53

ஜாதி மத வெறி, மொழி வெறி, இந வெறி, இதைத் தவிர வேலை வாய்ப்பு, மனித ஐயம், மக்களின் பாதுகாப்பு, உயிருக்கு பாதுகாப்பு,m கலாச்சாரத்துக்கு பாதுகாப்பு, நல்ல கல்வி, ஏதாவது பேசுகிறார்களா , எல்லா கூட்டங்களும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நிலையில்தான் பேசுகிறார்கள், தேர்தல் ஆணையம் ஊக்குவிக்கிறது, நீதி குறை அமைதி காக்கிறது, மக்கள் தினம் இனம் செய்வது அறியாமல் செத்துக்கொண்டு இருக்கின்றனர் , வந்தே மாதரம்


தாமரை மலர்கிறது
மே 02, 2024 18:53

நிறுவனங்களை தனியார் தான் திறம்பட நடத்தமுடியும் அரசு நடத்தினால், நஷ்டம் தான் ஏற்படும் அந்த பணத்தை வரிசெலுத்துவோர் தான் கொடுக்கநேரிடும் அரசு நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்து, திறம்பட நடத்த செய்தால், பொருளாதாரம் வின்னைநோக்கி பாயும் இடஒதுக்கீடு ஊனமுற்றோருக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் சாதி அடிப்படையில் கொடுக்க கூடாது நன்றாக கை, கால், கண்கள் வேலை செய்யும்போது கொழுப்பெடுத்து படிக்கமுடியாவிட்டால், அரசு ஒன்றும் செய்யமுடியாது


Yaro Oruvan
மே 02, 2024 18:19

அய்யய்யய அடிக்கிற வெயில்ல இவங்க இம்சை வேற முடியல


பேசும் தமிழன்
மே 02, 2024 17:01

... இண்டி கூட்டணி ஆட்கள் தான் ......அரசியலமைப்பை சீரழித்து மத சார்பாக நாட்டை பிரிப்பது நீங்கள் தான்.


அசோகன்
மே 02, 2024 16:53

. கேட்டதும் ஆத்திரம் வருமே ???


Rajarajan
மே 02, 2024 16:38

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொதுஅறிவு அற்றவர்கள் போதாக்குறைக்கு அதன் ஜால்ரா கம்யூனிஸ்ட் கட்சி வேறு தனது பொதுஅறிவை நிரூபிக்கிறது இவர்கள் ஆட்சியில் விளங்கிரும் நாடு அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமே, முக்கிய அரசு துறைகள் தவிர, மற்றவை கூடிய விரைவில் தனியார் மயமாக்கப்படவேண்டும் என்பது தானே


அப்புசாமி
மே 02, 2024 16:34

ஜாதிவெறி பிடிச்சு ஆடுற வரைக்கும் இட ஒதுக்கீடு இருந்துக்கிட்டே இருக்கும்.


அப்புசாமி
மே 02, 2024 16:00

நாட்டுக்கு நல்லது நடக்கட்டும். இட ஒதுக்கீடு ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை